ரவை இட்லி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ரவை -2 கிண்ணம்
2. புளித்த தயிர் - 2 கிண்ணம்
3. உப்பு - 1 1/2 தேக்கரண்டி
4. எண்ணெய் - 5 தேக்கரண்டி
5. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
7. கடுகு - 1/4 தேக்கரண்டி
8. முந்திரிப் பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
9. கொத்தமல்லி & கறிவேப்பிலை - சிறிது
10. பச்சைமிளகாய் - 10 எண்ணம்
11. பட்டாணி - 1/4 கிண்ணம்
செய்முறை:
1. பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும்.
2. ரவையை இலேசாக வறுத்து தயிரில் ஊற வைக்க வேண்டும்.
3. ஒரு மணி நேரம் ஊறியதும் நெய்யில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, முந்திரிபருப்பு போன்றவைகளைத் தாளித்து தயிரில் ஊறிய ரவை மாவுடன் சேர்க்கவும்.
4. கருவேப்பிலை, மல்லித்தழையை நன்றாகப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
5. இட்டிலி சட்டியில் இட்லி போல் ஊற்றி வேக வைக்கவும்.
குறிப்பு:
காரட் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து செய்தால் பார்வைக்கு நன்றாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.