ரவா கிச்சடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 1 கிண்ணம்
2. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
6. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
7. எண்ணெய் - 1 தேக்கரண்டி
8. நெய் (அல்லது) வெண்ணெய் - 1 தேக்கரண்டி
9. முந்திரி பருப்பு - சிறிது
10. கடுகு - தேவையான அளவு
11. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
12. தக்காளி - 2 எண்ணம்
13. வெங்காயம் - 100 கிராம்
14. பட்டை - 1 எண்ணம்
15. கிராம்பு - 2 எண்ணம்
16. பிரியாணி இலை - சிறிது
17. உப்பு - தேவையான அளவு
18. கறிவேப்பிலை - சிறிது
19. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. ரவையை வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம் போடவும். கடுகு பொறிந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து பொரிக்கணும்.
3. கடலைப் பருப்பு போட்டுச் சிவக்க வறுக்கவும்.
4. பெருங்காயத்தூள், மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் போட்டு வறுத்து வெங்காயம் சேர்க்கவும்.
5. இவையனைத்தும் வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
6. இரண்டு கிண்ணம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
7. தண்ணீர் கொதிக்கத் தொடங்கியவுடன் ரவையைச் சேர்த்துக் கிளர வேண்டும். ரவை உதிரி உதிரியாக ஆனதும் இறக்கவும்.
8. வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி,கறிவேப்பிலை வறுத்துக் கிச்சடியில் சேர்த்துக் கிளறவும்.
9. கிச்சடியின் மேலாக மல்லித்தழை தூவவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.