பூரி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு – 2 கப்
2. ரவை – 4 தேக்கரண்டி
3. உப்பு - தேவையான அளவு
4. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் நன்றாகக் கலந்துகொண்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்துப் பிசையவும்.
2. எண்ணெய் சேர்த்து, ஒட்டாமல் கெட்டியாகப் பிசையவும்.
3. சிறுசிறு உருண்டைகளாக உருட்டித் தயாராக வைத்துக் கொண்டு, உருண்டைகள் இருக்கும் பாத்திரத்தை மூடியே வைத்திருக்கவும்.
4. வாணலியில் எண்ணெய்யை மிதமான சூட்டில் காயவைக்கவும்.
5. உருட்டி வைத்த உருண்டையைப் பூரிக்கு ஏற்றதாக சின்னதாக வட்டமாகத் தேய்த்து வைக்கவும்.
6. தேய்த்து வைத்தவற்றை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.