மொச்சைக்காய் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. உரித்த மொச்சைக்காய் – 200 கிராம்
2. சின்ன வெங்காயம் – 100 கிராம்
3. வெள்ளைப்பூண்டு – 5 பற்கள்
4. தக்காளி – 1 எண்ணம்
5. மசாலாப் பொடி – 3 தேக்கரண்டி
6. புளி – எலுமிச்சையளவு
7. உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
8. எண்ணெய் – 2 தேக்கரண்டி
9. கடுகு – 1/4 தேக்கரண்டி
10. உளுந்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
11. வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
12. மிளகு – 1/4 தேக்கரண்டி
13. சீரகம் – 1/4 தேக்கரண்டி
14. பெருங்காயம் – சிறிது
15. கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
2. அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி, மொச்சைக்காய் போட்டு 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
3. அதன் பின் மசாலாப் பொடி, உப்பு, புளிக்கரைசல் சேர்த்து வேக விட்டுக் கொதித்து வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.