மொச்சைக் கொட்டைக் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மொச்சைக் கொட்டை - 300 கிராம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. பூண்டு - 4 பல்
4. இஞ்சி - சிறிது
5. சாம்பார் தூள் - 2 கரண்டி
6. புளி - சிறிது
7. தக்காளி - 1 எண்ணம்
8. பட்டை - சிறிது
9. இலவங்கம் - 4 எண்ணம்
10. மல்லித்தழை - சிறிது
11. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
12. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
13. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
14. கடுகு - 1/2 தேக்கரண்டி
15. உளுந்து - 1/2 தேக்கரண்டி
16. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் மொச்சைக் கொட்டையைத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. நன்கு ஊறிய கொட்டையைத் தோல் நீக்கவும் (ஒவ்வொன்றாக, கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில்வைத்து அழுத்தினால் தோல் நீங்கும்)
3. தோல் நீக்கிய கொட்டையை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
4. கடுகு, எண்ணை, உப்பு தவிர்த்து அனைத்துப் பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்து போட்டுத் தாளிக்கவும்.
6. தாளிசத்துடன், அரைத்த விழுது சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
7. அதில் வேகவைத்த மொச்சைக் கொட்டை, உப்பு சேர்க்கவும்.
8. சில நிமிடங்கள் குழம்பைக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.