காளான் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 1 கப்
2. குடைமிளகாய் - 1 எண்ணம்
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள் - 1/2 கரண்டி
7. கரம் மசாலாத் தூள் - 1/4 கரண்டி
8. மல்லித்தழை - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
11. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
12. மல்லி - 2 கரண்டி
13. மிளகு-1/2 கரண்டி
14. பட்டை-1 எண்ணம்
15. சோம்பு -1/4 கரண்டி
16. கிராம்பு - 2 எண்ணம்
செய்முறை:
1. காளானை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியைச் சூடாக்கி வறுத்து அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து அதைப் பொடி செய்து கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய்ச் சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் அதில் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
5. காளான் வதங்கியதும் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்த தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்க வைக்கவும்.
6. பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து வதக்கவும்.
7. அதில் சிறிது தண்ணீர், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.
8. கடைசியாக அதில், மல்லித்தழையைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.