காரக் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. புளி - 50 கிராம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. பூண்டு - 10 பல்
4. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
5. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
7. கடுகு - 1/4 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை - சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. புளியை அரை கப் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்து வடிகட்டவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, கிள்ளிய மிளகாய் வற்றல், வெந்தயம், கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
4. பிறகு, வடிகட்டிய புளித் தண்ணீர் விட்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
5. எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.