நெல்லிக்காய் மோர்குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நெல்லிக்காய் - 4 எண்ணம்
2. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. தயிர் - 1 கப்
5. தேங்காய் - 1/2 மூடி
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. மோர் மிளகாய் - 2 எண்ணம்
8. கறிவேப்பிலை - சிறிது
9. மல்லித்தழை - சிறிது
10. பெருங்காயத்தூள் - சிறிது
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. தேங்காயைத் துருவி வைக்கவும், நெல்லிக்காயை விதை நீக்கி நறுக்கி வைக்கவும்.
2. தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், நறுக்கிய நெல்லிக்காய் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
3. தயிரில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கிவைக்கவும்.
4. அதனுடன் அரைத்த நெல்லிக்காய் தேங்காய் விழுதை சேர்த்து குழம்பு பக்குவத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு போடவும்.
6. கடுகு பொரிந்ததும் மோர் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
7. பின்னர், அதனுடன் தயாராக வைத்திருக்கும் நெல்லிக்காய் மோர்க் கரைசலை சேர்க்கவும்.
8. அது நுரைத்து வரும் போதே இறக்கி விடவும். அதன்மேல் சிறிது மல்லித்தழையைப் போட்டு மூடி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.