வெண்டைக்காய் பால்கறி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் -150 கிராம்
2. தேங்காய்த் துருவல் - 4 மேசைக்கரண்டி
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
9. கடுகு - 1 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
2. ஒரு வாணலியில் நறுக்கிய வெண்டைக்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்கி வைக்கவும்.
3. தேங்காய்த் துருவலை அரைத்துத் தேங்காய்ப்பாலாக எடுத்து வைக்கவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டுப் பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. பின்பு அதில், நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
6. அனைத்தும் நன்றாக வதங்கிய பின்பு, வெண்டைக்காயைச் சேர்க்கவும் .
7. அதில் மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் பிரட்டிவிடவும்.
8. பின்னர் அதில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
9. நன்கு கொதித்த பின்பு இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.