மோர்க்குழம்பு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. மாம்பழம் - 1 எண்ணம்
2. புளித்த மோர் - 500 மில்லி
3. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
4. அரிசி - 1 தேக்கரண்டி
5. வெந்தயம் - 1 தேக்கரண்டி
6. துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
7. தேங்காய்த் துருவல் - 1 கப்
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் - 1 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. மாம்பழத்தை தோல் சீவி வேகவிட்டு, மசித்துக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டு அரிசி, துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.
3. நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
4. அரைத்த விழுதை மோருடன் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
5. இதனுடன் உப்பு, மசித்த மாம்பழக் கூழ் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
6. அரைத்த மோர்க் கலவையை அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
7. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து மோரில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.