மூலிகைக்குழம்பு
முனைவர் தி. கல்பனாதேவி
தேவையான பொருட்கள் 1:
1. கட்டிப் பெருங்காயம் - தேவையான அளவு
2. சுக்கு - 2 துண்டு
3. மிளகு - 2 தேக்கரண்டி
4. சீரகம் - 2 தேக்கரண்டி
5. திப்பிலி - 1 துண்டு (சிறிது)
6. அதிமதுரம் - 1 துண்டு (சிறிது)
7. சித்தரத்தை - 1 துண்டு (சிறிது)
8. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்
9. மல்லி - 5 தேக்கரண்டி
10. சாம்பார் வெங்காயம் - 5 எண்ணம் (வதக்கி அரைக்க) 5 எண்ணம் (கடுகுடன் வதக்கிச் சேர்க்க)
11. பூண்டு (உரித்த பல் பூண்டு) - 100 கிராம்
செய்முறை 1:
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் நெய் அல்லது நல்லெண்ணெய்யில் திட்டமான தீயினில், பொன்முறுவல் நிறத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் முறையாய்ச் சிறிது வறுத்தவுடன் ஆற வைக்கவும்.
பிறகு இவை அனைத்தையும் திட்டமான விழுது பதத்தினில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்2:
12. தக்காளி - 3 எண்ணம் (தக்காளிக்குப் பதிலாகப் புளி சேர்ப்பதாயின் அதனைத் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்)
13. மஞ்சள் துாள் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு
15. நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவையான அளவு
16. புளி - 3 நெல்லிக்காய் அளவு
17. தேங்காய் - கால் மூடி அரைத்த விழுது
18. நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவையான அளவு
19. கடுகு - 1/2 தேக்கரண்டி
20. உளுர்ந்து - 1/2 தேக்கரண்டி
செய்முறை 2:
1. பின்னர் வாணலியில் தாராளமாக நெய் விட்டுக் கடுகு, உளுந்து பொறிந்தவுடன் சிறிது வெங்காயம், தக்காளி பொன்முறுவலில் வறுத்துப் பின் அரைத்த விழுதுக் குழம்பினைச் சேர்த்து உப்பு, மஞ்சள்துாள், சேர்த்து அடிபிடிக்காமல் கிளறியபடி நன்கு கொதிக்க விடவும்.
2. பின்னர் இறக்குவதற்கு 5 நிமிடம் முன்னதாகத் தேங்காய் கால் மூடி அரைத்த விழுது தனியாய் வைத்துக் கொள்ள வேண்டும்.
3. இறுதியில் இதனைச் சேர்த்து 5 நிமிடம் லேசான கொதி வரும் பதத்தில் இறக்கி விடவும்.
4. கருவேப்பிலை, மல்லித்தழையினைச் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: தேங்காய் பயன்படுத்தாமலும் செய்யலாம்.
பயன்கள்:
உடலில் உள்ள வாதம் தொடர்ந்த தொல்லைகள் யாவும் விலகும். 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை உண்ணுவதால் சிறந்த பயனினைப் பெறலாம். தேவையற்ற கொழுப்புப் பகுதிகள் உடலில் இருந்து விலகும். வயிறு தொப்பை, வாத வலிகள், ஜீரணக்கோளாறுகள், மிகு ஏப்பம் யாவும் விலகும். நன்கு பசி எடுக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.