பூரிக்கிழங்கு மசாலா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 3 எண்ணம்
2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
3. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
4. கடலை மாவு - 1 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
9. பெரிய வெங்காயம் -1 எண்ணம்
10. தக்காளி - 1 எண்ணம்
11. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
12. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
2. குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் மூடியைத் திறந்து தண்ணீரை வடித்துச் சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பின் தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
3. கடலை மாவை 2 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
5. கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் தக்காளியைச் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
7. தக்காளி வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
8. கூட்டு கெட்டியாகும் போது கரம் மசாலா, கரைத்து வைத்துள்ள கடலைமாவு இரண்டையும் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.