வெந்தயக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சாம்பார் வெங்காயம் – 100 கிராம்
2. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
3. கடுகு – 1 தேக்கரண்டி
4. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
5. மல்லித்தூள் – 3/4 தேக்கரண்டி
6. சீரகப்பொடி – 1/4 தேக்கரண்டி
7. குழம்பு மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
8. புளி – 50 கிராம்
9. தக்காளி - 1 எண்ணம்
10. கருவேப்பிலை – சிறிதளவு
11. நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
12. கடலை எண்ணெய் – தேவையான அளவு
13. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, பிறகு அதனுடன் கடலை எண்ணையைச் சேர்த்து நன்றாகச் சூடாக்கவும்.
2. அதன்பிறகு அதில் வெந்தயம் மற்றும் கடுகு போட்டு நன்றாகத் தாளிக்கவும்.
3. அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
4. பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் சீரகப்பொடி போட்டு நன்றாகக் கலக்கவும்.
6. பின்னர், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஊறவைத்த புளிக்கரைசல் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடவும்.
7. அதில் சிறிதளவு கறிவேப்பிலை போட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.