பிரண்டைக் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பிரண்டைத் தண்டு (இளசானது) - 250 கிராம்
2. புளி - 100 கிராம்
3. மிளகாய்தூள் - 15 கிராம்
4. இஞ்சி - 15 கிராம்
5. மிளகுத்தூள் - 25 கிராம்
6. தேங்காய்ப்பால் -1 கப்
7. சின்னவெங்காயம் -125 கிராம்
8. தக்காளி -100 கிராம்
9. மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி
10. சீரகத்தூள் -1 தேக்கரண்டி
11. கடுகு -1 தேக்கரண்டி
12. வெந்தயம் -1 தேக்கரண்டி
13. நல்லெண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பிரண்டையைச் சுத்தம் செய்து நன்றாக மிக்சியில் அடித்து, அதனைப் புளி கரைத்த தண்ணீரில் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
2. அத்துடன் சீரகப்பொடி, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி, மிளகுபொடி, மிக்சியில் அடித்த வெள்ளைப்பூண்டு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி, தேவைக்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
3. சின்ன வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிப் போடவும்.
4. தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலக்கிக் கொதிக்க விடவும்.
5. தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம் போட்டுத் தாளிக்கவும். வட்டத் துண்டுகளாக வெட்டிய தக்காளியைப் போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.