வறுத்துப் பொடித்த சாம்பார்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. துவரம்பருப்பு - 1/2 கப்
2. காய்ந்த மிளகாய் - 4 எண்ணம்
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. தக்காளி - 2 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. புளி - நெல்லிக்காய் அளவு
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
9. பெருங்காயத்தூள் - சிறிது
10. கறிவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
12. எண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. துவரம்பருப்பு காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
3. அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
5. வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு, மிளகாய் பொடியைச் சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
6. கொதி வந்தவுடன் நறுக்கிய மல்லித்தழையைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: இச்சாம்பாரை இட்லி, தோசையுடன் சேர்த்துப் பரிமாற நன்றாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.