கொண்டைக்கடலைக் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கொண்டைக்கடலை - 1 கப்
2. சின்ன வெங்காயம் - 50 கிராம்
3. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
4. மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி
5. மல்லி - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1 /2 தேக்கரண்டி
7. தேங்காய்த் துருவல் - 1 /2 கப்
8. இஞ்சி - 1 அங்குலத்துண்டு
9. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
10. புளி - எலுமிச்சை அளவு
11. உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
12. கடுகு - 1 /4 தேக்கரண்டி
13. கறிவேப்பிலை - சிறிது
14. சின்ன வெங்காயம் - 50 கிராம்
15. பெருங்காயத்தூள் - சிறிது
16. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. கொண்டைக்கடலையை இரவு தண்ணீரில் ஊற வைத்துவிடவும்.
2. ஊறவைத்த கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.
3. புளியை ஊற வைத்துக் கரைத்து கொள்ளவும்.
4. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, சிறிதாக நறுக்கி வைக்கவும்.
5. கடாயில் எண்ணெய் விடாமல் மிளகாய் வற்றல், மல்லி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், கடைசியில் துருவிய தேங்காய் என ஒவ்வென்றாக தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும்.
6. வறுத்த பொருட்களுடன், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
7. அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வேகவைத்த கொண்டைக்க்கடலை, அரைத்த விழுது, பச்சைமிளகாய், புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
8. குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
9. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்துத் தாளித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.