கத்திரிக்காய் மசாலா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் - 8 எண்ணம்
2. பச்சைப் பட்டாணி - 1/4 கப்
3. வெங்காயம் - 1/2 கப்
4. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. புளி - எலுமிச்சையளவு
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
9. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
10. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
11. பிரியாணி இலை - 1 எண்ணம்
12. பட்டை- 1 எண்ணம்
13. ஏலக்காய் - 3 எண்ணம்
14. கிராம்பு - 3 எண்ணம்
15. எண்ணெய் - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு
17. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. பச்சைப்பட்டாணியை வேக வைத்து வைக்கவும்.
2. கத்தரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை ஆகியவற்றைத் தனித்தனியே நறுக்கி வைக்கவும்.
3. புளியைத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டுத் தாளிக்கவும்.
5. பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் நறுக்கிய கத்திரிக்காயைச் சேர்த்து, தட்டுப் போட்டு மூடி வைத்து நன்கு வேக வைக்கவும்.
7. பிறகு அதனுடன் புளிச்சாற்றைச் சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் போட்டு நன்கு கிளறவும்.
8. பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலாவை மூடி வைத்து பத்து நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.
9. மசாலா கெட்டியானதும், அதில் பச்சைப் பட்டாணி சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின்னர் அதனை இறக்கி, ஒரு முறை லேசாக மசித்துக் கொள்ளவும்.
10. இறுதியில் நறுக்கி வைத்த மல்லித்தழையினை மேலாகச் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறலாம்.
குறிப்பு:சாதம் அல்லது சப்பாத்திக்கு இந்த மசாலா சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.