காலிஃபிளவர் ரசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. காலிஃபிளவர் – 1 எண்ணம்
2. துவரம் பருப்பு – 1/4 கப்
3. தக்காளி – 1 எண்ணம்
4. பூண்டு – 5 பற்கள்
5. புளி – 1 தேக்கரண்டி
6. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
7. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
8. சர்க்கரை – 1/4 தேக்கரண்டி
9. மல்லி இலை – 2 தேக்கரண்டி
10. உப்பு – தேவையான அளவு
ரசப்பொடி
11. கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
12. மிளகு – 1 தேக்கரண்டி
13. சீரகம் – 1/2 தேக்கரண்டி
14. மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
தாளிக்க
15. எண்ணெய் – 2 தேக்கரண்டி
16. பட்டை – 1 சிறிய துண்டு
17. சோம்பு – 1/2 தேக்கரண்டி
18. கருவேப்பில்லை – சிறிது
செய்முறை:
1. காலிஃபிளவரை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
3. புளியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்துப் புளிக்கரைசலாக எடுத்து வைக்கவும்.
4. ரசப்பொடிக்கு அரைக்க வேண்டிய பொருட்களை சேர்த்துக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
5. காலிஃபிளவரைக் கொதிநீரில் உப்பு சேர்த்து மூழ்க வைத்து, பின்னர் அத்தண்ணீரை வடித்து வைக்கவும்.
6. ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் காலிஃபிளவர், கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்துத் தாளித்து, அதனை ரசத்தில் சேர்க்கவும்.
8. காலிஃபிளவர் வெந்தவுடன், புளிக்கரைசல் சேர்க்கவும்.
9. கொதிக்கும் ரசத்தில் அரைத்து வைத்திருக்கும் ரசப்பொடியினை சேர்க்கவும்.
10. வேகவைத்த பருப்பு சேர்த்து, தண்ணீர் அளவினைச் சரிசெய்யவும்.
11. சர்க்கரை மற்றும் சிறிது உப்பும் சேர்த்து, மல்லித்தழையினை மேலே தூவி இறக்கிப் பரிமாறலாம்.
குறிப்பு:
* பட்டை, சோம்பு பிடிக்காதவர்கள், கடுகு, சீரகம் போட்டுத் தாளித்துக் கொள்ளலாம்.
* காலிபிளவர் ரசத்தைச் சாதத்தில் சேர்த்தோ, தனியாகவோச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.