மாங்காய் சாம்பார்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் - 1/2
2. துவரம் பருப்பு - 1/3 கப்
3. புளி - சிறிது
4. சாம்பார் பொடி - 11/2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
7. வெங்காயம் - 1 எண்ணம்
8. தக்காளி - 1/2 எண்ணம்
9. பெருங்காயம் - 1 சிட்டிகை
10. கருவேப்பிலை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - 1 தேக்கரண்டி
13. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
14. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
15. பெருங்காயம் - 1 சிட்டிகை
16. கடுகு - 3/4 தேக்கரண்டி
17. சீரகம் - 1/2 தேக்கரண்டி
18. கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. பருப்பை 1 மிளகாய் வற்றல், பெருங்காயம் 1 சிட்டிகை, 1 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்ததும் நன்கு குழைத்து வைத்துக் கொள்ளவும்.
2. புளியை 1 கப் வெந்நீரில் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து நன்கு கரைத்து வடிகட்டி, புளிக்கரைசல் தயாரித்துக் கொள்ளவும்.
3. மாங்காயைச் சிறிது பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தது, தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும்.
5. தாளிசத்தில் நறுக்கி வைத்த வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
6. அதன் பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
7. ஒரு அடி கனமான பாத்திரத்தில், புளிக்கரைசல், 1 கப் தண்ணீர் சேர்த்து, வதக்கிய பொருட்கள், உப்பு, சாம்பார் போடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க விடவும்.
8. நறுக்கி வைத்த மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து வேக விடவும்.
9. சில நிமிடங்கள் கழித்து, மாங்காய் துண்டை எடுத்து, அதனை அழுத்தி வெந்துவிட்டதா எனச் சரி பார்த்துக் கொள்ளவும்.
10. அதன் பிறகு பருப்பைச் சேர்த்து, தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
11. கடைசியாகச் சில கருவேப்பிலை இலைகளைப் போட்டு, அடுப்பை விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.