தக்காளி சால்னா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தக்காளி – 3 எண்ணம்
2. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
3. சீரகம் – 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
5. மல்லி – 1 தேக்கரண்டி
6. கிராம்பு – 2 எண்ணம்
7. கடுகு – 1/2 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
9. தேங்காய்த்துருவல் – 3 மேசைக்கரண்டி
10. எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
11. இஞ்சி – சிறிது
12. பூண்டு – 5 பல்
13. பட்டை – சிறிது
14. சோம்பு – 1 தேக்கரண்டி
15. ஏலக்காய் – 2 எண்ணம்
16. சின்ன வெங்காயம் – 50 கிராம்
17. கசகசா – 1 தேக்கரண்டி
18. மல்லித்தழை – சிறிது
19. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. தக்காளி, வெங்காயம், சின்ன வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. கடாயை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம், தனியா, பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, இஞ்சி, பூண்டு, ஏலக்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
3. பின்னர் அதே கடாயில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், தேங்காய்த்துருவல் போட்டு வதக்கவும்.
4. அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
5. கடாயில் மீதியுள்ள எண்ணெய்யை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் சிறிது வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்துக் குழம்பைக் கொதிக்க விடவேண்டும்
7. குழம்பு நன்றாக கொதித்து மசாலா வாடை போன பின்பு, கெட்டியான பதம் வந்தவுடன் மல்லித்தழையைத் தூவி இறக்கவும்.
குறிப்பு:
இட்லி, சப்பாத்தி, புரோட்டாவிற்கு இந்தச் சால்னா நன்றாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.