உருளை மசாலா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு – 4 எண்ணம்
2. தக்காளிச் சாறு - 1/2 கப்
3. நெய் – 1/4 கப்
4. உப்பு – தேவையான அளவு
5. எண்ணெய் – தேவையான அளவு
அரைக்க:
6. தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி
7. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
8. கசகசா – 2 தேக்கரண்டி
9. மல்லி - 1 தேக்கரண்டி
10. கரம்மசாலாத் தூள் – 1 தேக்கரண்டி
11. பூண்டு – 8 எண்ணம்
செய்முறை:
1. உருளைக்கிழங்கைத் தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக வெட்டவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்துக் கிழங்கை வேகவைத்து, வெந்ததும் நீரை வடிக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வேகவைத்த உருளைக் கிழங்கைப் பொரித்தெடுக்கவும்.
4. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து எடுக்கவும்.
5. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்துப் பச்சை வாசனை போகக் கிளறவும்.
6. அதனுடன் தக்காளிச் சாறு, உப்பு, உருளைக்கிழங்கு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: சாதம், இட்லி, சப்பாத்தி என அனைத்திற்கும் இந்த மசாலா அருமையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.