காலிபிளவர் கிரேவி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காளிபிளவர் - 1 எண்ணம்
2. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. வெங்காயம் - 1 எண்ணம்
5. கரம் மசாலாத் தூள் - 1 மேசைக்கரண்டி
6. இஞ்சி - 1 மேசைக்கரண்டி
7. கடுகு - 1 தேக்கரண்டி
8. சோம்பு - 1 தேக்கரண்டி
9. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
10. மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
11. கருவேப்பிலை - சிறிது
12. மல்லித்தழை - சிறிது
13. உப்பு - தேவையான அளவு
14. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
2. காலிபிளவரை நறுக்கி, வெந்நீரில் சுத்தம் செய்து கொள்ளவும்.
3. கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
4. கடாயில், காலிபிளவர், உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து வைக்கவும்.
5. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சோம்பு, கருவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும்.
6. தாளிசத்துடன் தக்காளி மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
7. பின்னர் அதில் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக கிளறி விடவும்.
8. பின்னர், அதில் வதக்கி வைத்திருக்கும் காலிபிளவர், உருளைக்கிழங்கு சேர்த்து, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
9. நன்றாகக் கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும்.
10. கடைசியாக, அதில் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.