1. தக்காளி - 2 எண்ணம்
2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
3. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
5. மல்லித்தழை - சிறிது
6. கறிவேப்பிலை - சிறிது
அரைக்க
7. மிளகு - 1 மேசைக்கரண்டி
8. சீரகம் - 1 மேசைக்கரண்டி
9. பூண்டுப்பல் (தோலுடன்) - 6 எண்ணம்
தாளிக்க
10. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
11. மிளகாய் வத்தல் - 1 எண்ணம்
12. கடுகு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. முதலில் தக்காளியை கையால் மசித்து வைக்கவும். பிறகு தக்காளியுடன் 300 மில்லி தண்ணீர், மஞ்சள்தூள், காயத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
2. அரைக்கக் கொடுத்திருக்கும் மூன்றையும் கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிளகாய் வற்றலைப் போடவும். பிறகு கடுகு சேர்கவும்.
4. கடுகு வெடித்தவுடன் தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம், பூண்டு கலவையைச் சேர்த்துக் கிளறி அதனுடன் தக்காளிக் கரைசலை ஊற்றவும்.
5. ரசம் நுரை கூடி வரும் பொழுது மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
6. பிறகு ரசத்தை வேறு பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி விட்டுப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.