தக்காளி பாயா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. துருவிய தேங்காய் - 1 கப்
2. பொரிகடலை - 1/2 கப்
3. மிளகு - 2 தேக்கரண்டி
4. சீரகம் - 2 தேக்கரண்டி
5. சோம்பு - 1 தேக்கரண்டி
6. கசகசா - 1 தேக்கரண்டி
7. பட்டை - சிறிதளவு
8. ஏலக்காய் - 4 எண்ணம்
9. முந்திரிப் பருப்பு - 8 எண்ணம்
10. தக்காளி - 2 எண்ணம்
11. வெங்காயம் - 3 எண்ணம்
12. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
13. இஞ்சி - சிறிதளவு
14. பூண்டு - 7 எண்ணம்
15. உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
1. வெங்காயம் தக்காளி எடுத்து நறுக்கி வைக்கவும்.
2. கசகசாவைத் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
3. தேங்காய், பூண்டு, இஞ்சி, மிளகு , பச்சைமிளகாய், சோம்பு, முந்திரிப்பருப்பு, பொரிகடலை, ஊற வைத்த கசகசா போட்டு விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்.
4. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
5. அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
6. பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலாவைப் போட்டுக் கிளறி, அத்துடன் கருவேப்பிலை, தக்காளி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மூடி 2 விசில் வரை வேக விட்டு இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.