வெங்காயக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெங்காயம் - 3 எண்ணம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. மல்லித்தழை - சிறிது
6. கடலை மாவு - 1 மேசைக்கரண்டி
7. கறி மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
9. எண்ணெய் - தேவையான அளவு
10. பட்டை - சிறிது
11. கிராம்பு - 2 எண்ணம்
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
2. பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.
3. கடலை மாவை ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி, கறிமசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கியதும் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
7. நன்கு வெந்ததும் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவைச் சேர்க்கவும்.
8. குழம்பு கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: பூரி, சப்பாத்திக்கு இந்த வெங்காயக் குழம்பு அருமையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.