பட்டர்பீன்ஸ் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பட்டர் பீன்ஸ் - 100 கிராம்
2. உப்பு - தேவையானஅளவு
3. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
4. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
5. சீரகத்தூள் -1 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
7. இஞ்சி - 1 துண்டு
8. பட்டை - சிறிது
9. கிராம்பு - 2 எண்ணம்
10. பூண்டு - 4 பல்
11. தேங்காய்த்துருவல் - 5 மேசைக்கரண்டி
12. வெங்காயம் - 1/2 எண்ணம்
13. தக்காளி (பழுத்தது) - 1 எண்ணம்
தாளிக்க
14. நல்லெண்ணெய் - தேவையான அளவு
15. கடுகு - 1 தேக்கரண்டி
16. உளுந்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
17. வெங்காயம் - 1/4 எண்ணம்
18. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பட்டர்பீன்ஸ், சிறிது உப்பு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேக வைத்துக் கொள்ளவும்.
2. மிக்சியில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு எல்லாவற்றையும் சேர்த்து இலேசாகத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
3. அடுத்து, தேங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து மிக்சியில் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
5. கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்துக் கிளறவும்.
7. ஒரு நிமிடம் கழித்து வேக வைத்திருக்கும் பட்டர் பீன்ஸ், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
8. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.
9. குழம்பு கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.
குறிப்பு: சாதம், சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.