தக்காளி ரசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தக்காளி (பெரியது) - 5 எண்ணம்
2. மிளகு – 2 தேக்கரண்டி
3. சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
5. பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி
6. பூண்டு - 10 பல்
7. எண்ணெய் – 4 தேக்கரண்டி
8. கடுகு -1 தேக்கரண்டி
9. உளுத்தம்பருப்பு -1 தேக்கரண்டி
10. மிளகாய் வற்றல் – 3 தேக்கரண்டி
11. கருவேப்பிலை - சிறிது
12. மல்லித்தழை - சிறிது
13. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. தக்காளியைச் சிறியதாக நறுக்கி, அதனைக் கைவிட்டு நொருங்கப் பிசைந்து வைக்கவும்.
2. பிசைந்த தக்காளியுடன் முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
3. முழு மிளகு, முழு சீரகம், பூண்டு சேர்த்து பரபரவென்று தட்டி வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, வற்றல், கருவேப்பிலை போட்டுத் தாளித்து, இடித்து வைத்த மிளகு, சீரகம், பூண்டுக் கலவையைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.
6. அத்துடன் தக்காளிக் கரைசலைச் சேர்க்கவும்.
7. நெருப்பை மிதமாக வைத்து, அதில் நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்.
8. நுரை கூடி வரும் போது நெருப்பை அணைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.