கத்தரிக்காய் குருமா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் - 5 எண்ணம்
2. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்
3. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
4. தக்காளி - 4 எண்ணம்
5. பூண்டு - 2 பல்
6. தேங்காய்த் துருவல் 1 கோப்பை
7. மிளகாய் வற்றல் - 7 எண்ணம்
8. மல்லி - 1 மேசைக்கரண்டி
9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
10. சோம்பு - 1/2 தேக்கரண்டி
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. சோம்பு - 1/4 தேக்கரண்டி
13. பிரிஞ்சி இலை - 1 எண்ணம்
14. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
15. உப்பு - தேவையான அளவு
16. கறிவேப்பிலை - சிறிது
17. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், மல்லி, சீரகம், சோம்பு ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
2. பூண்டைத் தட்டி வைக்கவும்.
3. கத்தரிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சோம்பு, பிரிஞ்சி இலை போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. உருளைக்கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
8. தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டுச் சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இட்லி, தோசை, சப்பாத்திக்கு இந்தக் குருமா ருசியாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.