காலிப்ளவர் பட்டாணி குருமா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காலிஃப்ளவர் - 1/4 கிலோ
2. பட்டாணி - 100 கிராம்
3. உருளைக் கிழங்கு – 1/4 கிலோ
4. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
5. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
6. சோம்பு - 1 தேக்கரண்டி
7. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
8. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
9. மல்லித்தழை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. காலிஃப்ளவரை கழுவிச், சிறுசிறு துண்டுகளாய் நறுக்கி இலேசான சுடிநீரில் போடவும்.
2. மிளகாய் வற்றல், தேங்காய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
4. உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்து சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
5. வெங்காயத்தைச் சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
6. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து, நறுக்கிய வெங்காயம், காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.
7. பின்பு வேகவைத்த பட்டாணி, உருளைகிழங்குத் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.
8. அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து வதக்கிச் சிறிது நீர் ஊற்றித் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விட வேண்டும்.
9. நன்கு வெந்த பின்பு மல்லித் தழையினைத் தூவி இறக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.