மோர்க்குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. புளித்த மோர் – 500 மி.லி
2. வெண்டைக்காய் – 10 எண்ணம்
3. கடலைப்பருப்பு - 25 கிராம்
4. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
5. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
7. அரிசி – 1 தேக்கரண்டி
8. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
9. கடுகு – 1/2 தேக்கரண்டி
10. வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
11. எண்ணெய் – தேவையான அளவு
12. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. கடலைப்பருப்பு, மல்லி, மிளகாய் வற்றல், வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுக்கவும்.
2. வறுத்தவைகளுடன் தேங்காய் துருவல், அரிசி சேர்த்து மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மோருடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
4. வெண்டைக்காய்களைத் துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
5. வதக்கியவற்றைக் கலந்து வைத்து இருக்கும் மோருடன் சேர்க்கவும்.
6. இதை மிதமான தீயில் சுட வைத்து இலேசாக கொதித்ததும் இறக்கவும்.
7. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததுதும், அதில் கடுகு, வெந்தயம் தாளித்துச் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.