தயிர் உருளை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. உருளை கிழங்கு - 1/2 கிலோ
2. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
3. புளித்த தயிர் - 1/2 கிண்ணம்
4. இஞ்சிப் பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1/2 மேசைக்கரண்டி
6. மிளகுத்தூள் - 1/2 மேசைக்கரண்டி
7. கரம் மசாலாத் தூள் - 1/2 மேசைக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும்.
2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் காய வைத்து வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
4. அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. அத்துடன் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து சில நிமிடங்கள் மிதமான நெருப்பில் வைத்து வதக்கவும்.
6. கடைசியில் பின்னர் கரம் மசாலா, தயிர் சேர்த்துச் சுருளக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.