காய்கறி குருமா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கேரட் - 100 கிராம்
2. பீன்ஸ் - 100 கிராம்
3. காய்ந்த பட்டாணி - 50 கிராம்
4. உருளைக்கிழங்கு - 1 எண்ணம்
5. தக்காளி - 1 எண்ணம்
6. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
7. மல்லித் தூள் -2 மேசைக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
9. தேங்காய்த் துருவல் -3 மேசைக்கரண்டி
10. சோம்பு - 1 தேக்கரண்டி
11. பூண்டு - 3 பல்
12. இஞ்சி - சிறிது
13. பட்டை - சிறிது
14. கிராம்பு - 1 எண்ணம்
15. இலவங்கம் - 1/2 எண்ணம்
16. பெரிய வெங்காயம் - 1 என்ணம்
17. எண்ணெய் - தேவையான அளவு
18. கறிவேப்பிலை - சிறிது
19. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. காய்ந்த பட்டாணியை 5 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பின் தண்ணீரை வடித்து வைக்கவும்.
2. வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்சைப் பொடிதாகவும் நறுக்கி வைக்கவும்.
3. தேங்காய்த் துருவல், சோம்பு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.
4. கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றைத் தண்ணீர் ஊற்றி வேக வைத்துத் தண்ணீரை வடிக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, இலவங்கம் போட்டுத் தாளித்துக் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
6. அத்துடன் வேக வைத்த காய்கள், பட்டாணியுடன், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
7. நன்கு வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்துக் குருமா கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.