டர்னிப் சாம்பார்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. துவரம்பருப்பு - 3 தேக்கரண்டி
2. டர்னிப் - 1 எண்ணம்
3. முருங்கைக்காய் - 1 எண்ணம்
4. அவரைக்காய் - 6 எண்ணம்
5. புளி - நெல்லிக்காய் அளவு
6. வெங்காயம் - 8 எண்ணம்
7. மிளகாய் - 2 எண்ணம்
8. சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
10. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
11. எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
12. கடுகு -1/2 தேக்கரண்டி
13. பெருங்காயம் - சிறு துண்டு
14. கருவேப்பிலை - சிறிது
15. மல்லித்தழை - சிறிது
16. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. புளியை இளஞ்சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. வெங்காயம், மிளகாய், டர்னிப், முருங்கைக்காய், அவரைக்காய் போன்றவைகளை நறுக்கி வைக்கவும்.
3. பருப்பை வேக வைத்து நன்கு மசித்து, அதில் நீர் சேர்த்துக் கலக்கி வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த பருப்புடன் சிறிது தண்ணீர், சாம்பார் தூள் , மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் குறைவான நெருப்பில் கொதிக்க விடவும் .
5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
6. தாளிசத்துடன் நறுக்கி வைத்திருக்கும் மிளகாய், வெங்காயத்தைப் போட்டுச் சிறிது வதக்கவும்.
7. வெங்காயம் வதங்கியவுடன் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.
8. பின்னர் அதில் நறுக்கி வைத்திருக்கும் டர்னிப், முருங்கைக்காய் மற்றும் அவரைக்காயைச் சேர்க்கவும்.
9. புளிக்கரைசலை வடி கட்டிக் கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.
10. நன்கு கொதித்து வந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.