அப்பளக் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அப்பளம் - 2 எண்ணம் (பெரியது)
2. சாம்பார் தூள் – 1 1/4 தேக்கரண்டி
3. கடுகு - 1/4 தேக்கரண்டி
4. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
5. உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
9. புளி – எலுமிச்சை அளவு
10. உப்பு – தேவையான அளவு
11. நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. அப்பளத்தைச் சிறிய துண்டுகளாக (தேவையான வடிவங்களில்) துண்டித்து வைக்கவும்.
2. புளியை, சுடு நீரில் சுமார் 10 நிமிடம் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும்.
3. ஒரு வாணலியில், நல்லெண்ணையை விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன், மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போடவும்.
5. அத்துடன் சாம்பார் தூள் போட்டுத் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
6. கரைத்து வடிகட்டிய புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கெட்டியாகும் வரைக் கொதிக்க வைக்கவும்.
7. துண்டித்து வைத்திருக்கும் அப்பளத்தைக் குழம்பில் போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.