எண்ணெய்க் கத்தரிக்காய்க் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் - 7 எண்ணம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. பூண்டு - 4 பற்கள்
5. சீரகம் - 3/4 தேக்கரண்டி
6. புளிக்கரைசல் - 1/2 கோப்பை
7. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
10. தேங்காய்த் துருவல் - 3/4 கோப்பை
11. கடுகு - 1/4 தேக்கரண்டி
12. உளுந்து - 1/4 தேக்கரண்டி
13. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
14. கறிவேப்பிலை - சிறிது
15. எண்ணெய் - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கத்தரிக்காய் நுனிகளை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
2. வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். (சீரகம் சேர்க்க விரும்பினால் சிறிது சேர்த்துத் தாளிக்கலாம்)
3. தாளிசத்துடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. அவையனைத்தும் நன்கு வதங்கிய பின்பு 1/4 கோப்பை எண்ணெய்யை அதனுடன் சேர்க்கவும்.
6. பின்னர் அதில் கத்தரிக்காய்களைச் சேர்த்துச் சில நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.
7. புளிக்கரைசலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி ஊற்றி வாணலியை மூடி வேகவிடவும்.
8. தேங்காய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
9. கத்தரிக்காய் நன்றாக வெந்ததும், தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கி வேக விடவும்.
10. குழம்பு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.