பாகற்காய் புளிக்குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பாகற்காய் - 200 கிராம்
2. சின்ன வெங்காயம் - 50 கிராம்
3. தக்காளி - 100 கிராம்
4. புளி - 1 எலுமிச்சை அளவு
5. மிளகாய்த் தூள் - 2 மேசைக்கரண்டி
6. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
9. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
10. பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
11. கறிவேப்பிலை - சிறிது
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. புளியைத் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளியைச் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
3. பாகற்காயை வட்ட வடிவில் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
6. அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் பாகற்காயைச் சேர்த்து வதக்கவும்.
7. பாகற்காய் வதங்கியதும், அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
8. பின்பு அதில் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பாகற்காய் வேகும் வரை மிதமான நெருப்பில் கொதிக்க விடவும்.
9. அதில் புளிக்கரைசலை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டுக் கடைசியாகச் சர்க்கரையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.