பருப்பு ரசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. புளி: 1 எலுமிச்சை அளவு
2. பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 கப்
3. தக்காளி - 1 எண்ணம்
4. ரசப்பொடி - 3 தேக்கரண்டி
5. மல்லித்தழை - சிறிது
6. கடுகு - சிறிது
7. கறிவேப்பிலை - சிறிது
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. தண்ணீரில் புளியைச் சிறிது நேரம் ஊற வைத்துப் பின்னர் கரைத்து 2 கப் புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.
2. புளித்தண்ணீரில் நறுக்கிய தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும்.
3. அதனுடன் ரசப்பொடி, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
4. கொதித்து வரும் போது, அதில் பருப்பு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்துச் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, கொதிக்க வைத்த ரசத்துடன் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.