மோர்க்குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கெட்டியான தயிர் – 1 1/2 கப்
2. பூசனிக்காய் – 150 கிராம்
3. தேங்காய்த் துருவல் – 1 கப்
4. பச்சை மிளகாய் – 6 எண்ணம்
5. சீரகம் – 1 1/2 மேசைக்கரண்டி
6. இஞ்சி – சிறு துண்டு
7. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
8. பெருங்காயம் - சிறிது
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. உப்பு – தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு
12. கறிவேப்பிலை - சிறிது
13. மல்லித் தழை - சிறிது.
செய்முறை:
1. தயிரைத் தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கொள்ளவும்.
2. பூசனிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு அதை முக்கால் பதத்திற்கு வேக வைத்துக் கொள்ளவும்.
3. தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், 1 தேக்கரண்டி சீரகம், இஞ்சி ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், வேகவைத்த காய், அரைத்த விழுது சேர்த்து மிதமான நெருப்பில் சுட வைக்கவும்.
5. சூடேறிப் பொங்கி வரும்போது 2 மேசைக்கரண்டி எண்ணை சேர்த்துக் கீழே இறக்கி வைக்கவும்.
6. வாணலியில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, மீதமுள்ள சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து மோர்க்குழம்புடன் சேர்க்கவும்.
7. கடைசியாக மோர்க்குழம்பில் மல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.