வெந்தயக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வெங்காயம் - 1 எண்ணம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. பூண்டு - 8 பல்
4. சாம்பார்ப் பொடி - 2 தேக்கரண்டி
5. வெல்லம் - சிறிது
6. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
7. வெந்தயம் - 3/4 தேக்கரண்டி
8. துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
9. புளி - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
11. நல்லெண்ணெய் - தேவையான அளவு
12. கடுகு - 1/4 தேக்கரண்டி
13. பெருங்காயம் - சிறிது
14. கருவேப்பிலை -சிறிது.
செய்முறை:
1. தேங்காய்த்துருவலை அரைத்துப் பாலாக எடுத்து வைக்கவும். புளியைச் சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும்.
2. வெந்தயம், துவரம்பருப்பை சிவக்க வறுத்துப் பொடியாக பண்ணி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சற்று வதக்கிய பின், பூண்டைச் சேர்த்து வதக்கவும்.
5. பிறகு, அதனுடன் தக்காளி சேர்க்கவும்.
6. தக்காளியும் நன்கு வெந்து குழையவும், அதனுடன் சாம்பார்ப் பொடி சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
7. தேவையான தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும், எண்ணெய் திரண்டு வரும் போது புளிக் கரைசல் ஊற்றவும்.
8. புளிக்கரைசல் நன்றாகக் கொதித்துக் கெட்டியாக வரும் போது தேங்காய்ப் பாலை ஊற்றவும்.
9. கொதித்து வரும் போது பொடித்து வைத்து இருக்கும் வெந்தயம், துவரம் பருப்புப் பொடியைச் சேர்த்து, அதனுடன் வெல்லத்தைச் சேர்க்கவும்.
10. சிறிது நேரத்திற்குப் பின்பு குழம்பை இறக்கி வைத்து மேலாக ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.