கத்தரிக்காய் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
4. தக்காளி - 2 எண்ணம்
5. கத்தரிக்காய் – 3 எண்ணம்
6. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
7. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
8. மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
9. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
10. கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
11. புளிக் கரைசல் - 3 மேசைக்கரண்டி
12. சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
13. உப்பு – தேவையான அளவு
14. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும், அதில் கரம் மசாலாத்தூளைச் சேர்த்து வாசம் வரும் வரை சிறிது நேரம் வதக்கவும்.
3. அதனுடன் வெங்காய விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
5. அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி வதங்கியதும் மசாலாத் தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்.
7. அதனுடன் கத்தரிக்காய் மற்றம் பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறவும்.
8. பிறகு, அதில் தேவையான அளவு நீர், புளி மற்றும் சர்க்கரை சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.
9. காய்கறிகள் வெந்ததும், எண்ணெய் மேலே வந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.