பன்னீர் பட்டர் மசாலா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பன்னீர் துண்டுகள் -10 எண்ணம்
2. தக்காளி - 5 எண்ணம்
3. வெங்காயம் - 4 எண்ணம்
4. பால் -1/2 கப்
5. முந்திரிப்பருப்பு -10 எண்ணம்
6. கிராம்பு - 4 எண்ணம்
7. பட்டை - சிறிது
8. மல்லித்தூள் -1 கரண்டி
9. சீரகத்தூள் -1 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
11. இஞ்சி பூண்டு விழுது -1/2 தேக்கரண்டி
12. மிளகாய்த்தூள் -1 கரண்டி
13. எண்ணெய் -1கரண்டி
14. வெண்ணெய் -2 கரண்டி
15. ஏலக்காய் -3 எண்ணம்
16. உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
1. பன்னீரை சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொதிக்கும் தண்ணீரில் 45 நிமிடங்கள் வரை போட்டு வைக்கவும்.
2. பாலில் முந்திரிப்பருப்பை ஊற வைத்துப் பின்னர் விழுதாக அரைத்து வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் வெங்காயத்தைப் போட்டுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
4. தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்களுக்கு பின் தோலுரித்துக் கொள்ளவும்.
5. பிறகு வெங்காயம், தக்காளியை தனித்தனியாக மிக்ஸ்யில் அரைத்து வைக்கவும்.
6. கடாயில் வெண்ணெயைப் போட்டு உருகிய பின், அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவைகளைப் போட்டு வதக்கவும்.
7. பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கிய பிறகு, தக்காளி விழுதைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
8. பின் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து, அனைத்தையும் போட்ட பின் பாலில் அரைத்த முந்திரியை சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
9. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஊற வைத்த பன்னீரைப் போட்டு வதக்கவும்.
10. வதக்கிய பன்னீரைக் கொதித்து கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்துக் கொதித்த பின் இறக்கி வைத்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.