* தோசை பொன்னிறமாக வர, இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்று பொன்னிறமாக இருக்கும்.
* மெதுவடை செய்வதற்கு, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.
* சாம்பார் செய்ய பருப்பு வேக வைக்கும் போது, பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.
* புளிக் குழம்பு செய்யும் பொழுது சிறிதளவு வெந்தயம் சேர்த்துத் தாளித்தால் சுவையாக இருக்கும்.
* மோர்க்குழம்பு செய்யும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி குழம்பில் சேர்த்தால் நல்ல வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.
* பால் இளஞ்சூட்டோடு இருக்கும் போது உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக உறையும்.
* ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.
* முட்டை ஆம்லெட் செய்யும் போது முட்டை கலவையுடன் ஒரு தேக்கரண்டி வெண்ணைய் சேர்த்து செய்தால் ஆம்லெட் மிருதுவாக இருக்கும்.
* ஆப்பம், இடியாப்பத்திற்க்கு ஊற்றி சாப்பிட எடுக்கும் தேங்காய் பாலுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.
* குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.
* சப்பாத்தி மிருதுவாக வருவதற்கு மாவு பிசையும் போது சிறிது பால் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
* சாதம் வெள்ளையாகவும், உதிரியாகவும் வர, அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.
* பால் பாயாசம் செய்யும் பொழுது, பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.
* இஞ்சி பூண்டு விழுது தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.
* வெங்காய வடகத்தை வெறும் கடாயில் போட்டு லேசாக சூடாக்கி விட்டு, பிறகு எண்ணெயில் பொரித்தால் நன்றாக பொரிந்து மொறு மொறுப்பாக இருக்கும்.
* ஒரு கப் கோதுமை மாவுக்கு இரண்டு பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி செய்தால் நல்ல மொறுமொறுப்பாக இருக்கும்.
* இடியாப்ப மாவுடன் சிறிது நெய் சேர்த்துப் பிசைந்து இடியாப்பம் பிழிந்தால் மிகவும் மென்மையாக இருக்கும்.
* வெண்டைக்காயைப் பொடிதாக நறுக்கி வெயிலில் அரை மணி நேரம் வைத்து பின்னர் பொரியல் செய்தால் வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு நீங்கி விடும்.
* தோசை ஊற்றுவதற்கு முன்பு, தோசைக் கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்குப் பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு ஊற்றினால் தோசை நன்றாக விரிந்து வரும்.
* ரவா தோசை சுடும் போது, மாவில் இரண்டு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நல்ல மொறுகலாக வரும்.
* சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு மேஜைக்கரண்டி தயிரும், வெந்நீரும் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
* ரசம் வைக்கும் போது தேங்காய் தண்ணீரும் சேர்த்து செய்தால் ரசம் நல்ல ருசியாக இருக்கும்.
* தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
* அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக் கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.
* பூரி செய்வதற்கு மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்தால், பூரி நீண்ட நேரம் அப்படியே உப்பலாக இருக்கும்.
* ஒரு கைப்பிடி சாதத்தை மிக்சியில் அரைத்து இட்லி மாவுடன் கலந்து அவித்தால் இட்லி பஞ்சு போல இருக்கும்.