ஒவ்வொரு உணவுப்பொருளும், குளிர்பதனப் பெட்டியில் எவ்வளவு நாட்கள் புதிது போன்று இருக்கும் என்பது குறித்த தகவல்.
பழங்கள்
* ஆப்பிள் - 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம்.
* திராட்சை - இதனை கழுவாமல் 6 நாட்கள் வரை வைக்கலாம்.
* ஆரஞ்சு - 2 வாரங்கள் வரை வைக்கலாம்.
* அன்னாசிப்பழம் - நன்கு பழுத்த பிறகு, 3 முதல் 5 நாட்கள் வைக்கலாம்.
* தர்பூசணி துண்டு – 6 முதல் 8 நாட்கள் வைக்கலாம்.
* எலுமிச்சை - 2 வாரங்கள் வைக்கலாம்.
* பெர்ரி பழ வகைகள் - நெகிழி உறையில் அடைத்து 2 முதல் 3 நாட்கள் வரை வைக்கலாம்.
* பேரிக்காய், சப்போட்டா, கொய்யா போன்றவை – பழுக்கும் வரை வெளியில் வைத்திருந்து, பிறகு 3 முதல் 5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
* திராட்சை, பிளம்ஸ் - 3 முதல் 5 நாட்கள்.
* வாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். பச்சை நிறம் நீங்கி 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
காய்கறிகள்
* பீன்ஸ் - இதை நன்கு கழுவி வைத்திருந்து 3 முதல் 5 நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
* கத்தரிக்காய் - நெகிழி உறையில் போட்டு 3 முதல் 4 நாட்கள் பயன்படுத்தலாம். (கத்தரிக்காயை வெளியிலேயே வைத்துக் கொள்ளலாம்)
* தக்காளி - வெளியில் அல்லது குளிர்பதனப் பெட்டியினுள் வைத்தும் பயன்படுத்தலாம். ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
* கேரட் - நன்கு கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு நெகிழி உறையில் போட்டு இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
* பீட்ருட் - 2 வாரம் வைத்திருக்கலாம்.
* காலிபிளவர், முள்ளங்கி – 2 வாரம் வைத்திருக்கலாம்.
* வெண்டைக்காய் - 5 முதல் 7 நாட்கள் வைக்கலாம்.
* உருளைக்கிழங்கு - வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம்.
* வெங்காயம் - வெளியில் காற்றோட்டமான இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம்.
* குடமிளகாய் - நன்கு கழுவி உலர்த்திய பிறகு, நெகிழி உறையில் போட்டு ஒரு வாரம் வைக்கலாம்.
* கீரை வகைகள் - நெகிழி உறையில் 3 – 5 நாட்கள் வைக்கலாம்.
* முட்டைக்கோஸ் - நெகிழி உறையில் 2 வாரங்கள் வைக்கலாம்.
* காளான் – அதிகபட்சம் 2 முதல் 3 நாட்கள் வைக்கலாம்.
* பூசனிக்காய், வெள்ளரிக்காய் – 1 வாரம் வைக்கலாம்.
அசைவ உணவுகள்
* முட்டை - 3 முதல் 5 வாரங்கள் வைக்கலாம்.
* வேக வைத்த முட்டை - 5 முதல் 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
* முட்டை வெள்ளை கரு - 2 முதல் 3 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
* முட்டையின் மஞ்சள் கரு - 2 முதல் 4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
* சிக்கன் (தோல் நீக்காதது) – 1 முதல் 2 நாட்கள் வைத்திருக்கலாம்.
* மாட்டுக்கறி – 1 முதல் 3 நாட்கள் வைக்கலாம்.
* மீன் - 1 முதல் 2 நாட்கள் வைக்கலாம்.
* இறால், நண்டு – 2 நாட்கள் வைக்கலாம்.
* சமைத்த இறைச்சி - 4 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்.
* வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி - 2 முதல் 3 நாட்கள்.
* சமைத்த மீன் - 3 முதல் 4 நாட்கள்