வெள்ளை முடி கருமையாக...!
1. கடுக்காய்த்தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் 3 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை சக்தி அத்கரிக்கும். கண் குளிர்ச்சியுடன் சளியினால் ஏற்படும் தலைவலியும் நீங்கும்.
2. வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் சேர்த்து பொடியாக்கி தினசரி இரவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகமாகும்.
3. பாலில் சிறிது மஞ்சள் பொடி, மிளகுப் பொழி, பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் நாள்பட்ட சளி, இருமல் கூட குறைந்து விடும்.
4. சிறிது சீரகம், ஒரு கிராம்பு, இரண்டு மிளகு ஆகியவற்றை பசும்பால் விட்டு அரைத்து நெற்றொயில் பூசிக் கொண்டால் தீராத தலைவலி போய்விடும்.
5. காய்ந்த நெல்லிக்காயைப் பொடியாக்கித் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டித் தேய்த்து வந்தால் வெள்ளை முடி கூட கருமையாகிவிடும். முடி உதிர்வதும் இருக்காது.
6. கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை இவற்றைப் பாலில் அரைத்து முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசி 30 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் சுருக்கம் மறையும். தேமல், கரும்புள்ளிகளும் நீங்கும்.
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.