* கோடைக்காலத்தில் கிடைக்கக்கூடிய பருவக்காலப் பழங்கள், எலுமிச்சைச்சாறு கலந்த சர்பத், மண்பானைத் தண்ணீர் ஆகியவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.
* புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலைகள் உடல் சூட்டை நீக்குவதோடு, ஒரே நேரத்தில் உடலை நச்சுத்தன்மையற்றதாக மாற்றுவதற்கு உதவுகிறது. அத்துடன் நீரில் சப்ஜா விதைகளை கலந்துக் குடிக்கலாம்.
* தேங்காய்த் தண்ணீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், மாதுளை போன்றவற்றை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் மோர், கற்றாழை, மிளகுக்கீரை, எலுமிச்சை, பால் மற்றும் தேன், வெந்தயம் போன்றவற்றையும் கோடைக்காலத்தில் அதிகளவில் தினமும் சாப்பிடும் உணவுகளில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* செயற்கை நிறமூட்டிகள் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த குளிர்பானங்களைத் தவிர்த்து, இளநீர், நுங்கு, பதநீர் போன்ற இயற்கையான குளிர்பானங்களை அருந்தலாம்.