பாலில் இருந்து வெண்ணையை பிரித்தெடுத்த பின்னர், மீதம் உள்ள நீரான மோர் (சில வேளைகளில் தயிருடன் அதிக அளவில் நீர் கலந்து கொள்வதும் மோர்) அருந்துவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் சில இங்கே;
* நம் உடலுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல், தாகத்தைத் தணித்து உடலின் நீர்ச்சத்தைத் தக்க வைக்கும் அருமையான பானம் மோர்.
* மோரில் காணப்படும் லாக்டிக் அமிலப் பாக்டீரியா ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிக்கும், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
* மோரில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்துத் தினமும் குடித்து வந்தால், உடல் மற்றும் சரும வறட்சிப் பிரச்சனைகள் நீங்கும்.
* மோரில் பயோ ஆக்டிவ் புரதங்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகிறது. இவை உடல் செல்களில் உள்ள சோடியத்தின் அளவைச் சமநிலைப்படுத்த உதவுவதோடு, இரத்த அழுத்தத்தைச் சமநிலைப்படுத்துகிறது.
* உண்ணும் உணவில் உள்ள கழிவுகளைப் போக்கி, உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்கு கொண்டு சேர்க்கும் பணியை மோரில் உள்ள சேர்மங்கள் செய்கின்றன. இதனால், கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும்.
* உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பணியை மோர் சிறப்பாகச் செய்கிறது. மோர் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி சருமம் பொலிவுறும்.
* மாமிசம், மசாலா பொருட்கள் நிறைந்த கடின உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற உணவர்வினைக் கட்டுப்படுத்த ஒரு கிளாஸ் மோருடன், இஞ்சி சேர்த்துக் குடிப்பது நல்லது.
* ஆரோக்கியமான எலும்புகளுக்கு முக்கியமான கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் மோரில் ஏராளமாக உள்ளன. தொடர்ந்து மோர் உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்களைத் தடுக்க உதவும்.
* மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் அதிகப்படியான இரத்தப்போக்குப் பிரச்சனைக்கும், வயிற்று வலிக்கும் மோர் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கோப்பை மோரில் வெந்தயம் சேர்த்து குடித்து வர இந்தப் பிரச்சனைகள் நீங்கும்.
* மோரில் காணப்படும் புரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள், உடலில் செரிமானச் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதனால் மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது.
* மோரில் புரதச்சத்து அதிக அளவு காணப்படுகிறது. இந்தப் புரதம் நம் உடலில் சேரும் போது, நம் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது. எனவே, ஆரோக்கியமான உடல் எடை குறைப்பை விரும்புவோர் அனைவரும் மோரை அதிகம் பருகலாம்.