கோடைக்காலத்தில் கிடைக்கும் பழ வகைகளில் தர்ப்பூசணி ஒன்றே குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை;
* தர்ப்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம் குறையும். உடல் சூடு தணியும்.
* தர்ப்பூசணியில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால், இதயத்துடிப்பை சீராக்கி, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.
* தர்ப்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு பனிகட்டி சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருப்பதுடன், உடல் குளிர்ச்சி ஏற்படும். வயிற்று வலி தீரும்.
* தர்ப்பூசணி பழச்சாறுடன் சிட்டிகை அளவு சீரகப்பொடி, சர்க்கரை சேர்த்து அருந்த நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.
* தர்ப்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி நீங்கும்.
* தர்ப்பூசணிப் பழசாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும்.
* தர்ப்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகள் நீங்கும்.
* தர்ப்பூசணியில் உள்ள லைக்கோபீன் மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.
* தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லூடீன், சியாக்ஸன்தின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன. இவை மாலைக்கண் நோய், கண்விழி மிகை அழுத்தநோய் போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.
* தர்ப்பூசணி சாறு அருந்துவதால், நீர் இழப்பு பிரச்னைகள் ஏற்படாமல் சருமத்தைப் பாதுகாக்கிறது.
* தர்ப்பூசணி உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
* தர்ப்பூசணி சாப்பிடுவதால், தமனிகள் சிறப்பாக செயல்பட உதவும். எலும்புகளை பாதுகாத்து, ஆஸ்டியோபோரோசியைத் தடுக்கிறது.