உலகம் முழுவதிலும் சமையல் மற்றும் சமையல் அல்லாத நோக்கங்களுக்காக எலுமிச்சை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பழச்சாறுக்கு உணவு மற்றும் சுத்திகரிப்பு பயன்பாடு என்று நிலைகள் உள்ளன. திசுக்கூழ் மற்றும் தோல் கூட சமையல் மற்றும் உட்சுடல் என்ப்படும் பேக்கிங்கில் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சைச் சாறில் சுமார் 5% முதல் 6% வரை சிட்ரிக் அமிலம் உள்ளது, எலுமிச்சைச் சாறின் தனித்துவமான புளிப்பு சுவை எலுமிச்சைப் பானம் போன்ற உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. எலுமிச்சை அதன் சுவைக்காகவும் அற்புதமான மருத்துவ குணங்களுக்காகவும் தனித்து விளங்குகிறது.
* எலுமிச்சைப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் தாத்துக்கள், உடலுக்கு ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் தருகிறது.
* எலுமிச்சையின் புளிப்பு சுவை, இதயத்தின் ஆரோக்கிய அரணாகச் செயல்படுகிறது. உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த அளவைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் எலுமிச்சை முக்கியப் பங்காற்றுகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் இதயம் தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது.
* எலுமிச்சையின் மெடபாலிஸத்தை மேம்படுத்தும் பண்புகள், உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. உணவில் எலுமிச்சையைச் சேர்க்கும் போது, வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கிறது. இதனால் அதிகமான உணவுகள் சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.
* எலுமிச்சை சாப்பிடுவதால் நம் சிறுநீர் அளவு மற்றும் pH அதிகமாகி, கற்கள் உருவாகும் வாய்ப்பு குறைகிறது.
* எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், தாவர ஆதாரங்களில் உள்ள இரும்புச்சத்து கிடைப்பதற்கு உதவுகிறது. இது ரத்தம் தொடர்புடைய பொதுவான பிரச்சனைகளைச் சரி செய்ய உதவுகிறது.
* எலுமிச்சை, நமது உமிழ் நீரையும் இரைப்பைச் சாற்றையும் அதிகப்படுத்தி செரிமானத்தை ஒழுங்குப்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை குறைகிறது.
* எலுமிச்சையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துவதோடு தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.