மரவள்ளிக்கிழங்கு அடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
2. ரவா - 50 கிராம்
3. சின்னவெங்காயம் - 10 எண்ணம்
4. பூண்டு பல் - 4 எண்ணம்
5. சோம்பு - 1 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
10. கருவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. மரவள்ளிக்கிழங்கைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. நறுக்கிய மரவள்ளிக் கிழங்குத்துண்டுடன் சோம்பு, சிறிது தண்ணீர் சேர்த்து இலேசாகக் கரகரப்பாக அரைக்கவும்.
3. பூண்டு, வெங்காயத்தை தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. அரைத்த விழுதுடன் எண்ணெய் தவிர, எல்லாப் பொருட்களையும் கலந்து தோசை மாவுப் பதத்தில் நன்றாகக் கிளறவும்.
5. அந்த மாவைத் தோசை கல்லில் தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.