பூண்டு புதினா தோசை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. தோசை மாவு – 2 கப்
2. பூண்டு – 20 பற்கள்
3. புதினா – சிறிது
4. சீரகம் – 1/2 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
6. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. பூண்டுப் பற்களை தோலுரித்து, நீளவாக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும்.
2. மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. புதினாவைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிப் பூண்டை அரைப்பதமாக வதக்கி எடுக்கவும். இதே போல் புதினாவையும் இலேசாக வதக்கி வைக்கவும்.
5. தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பமாக ஊற்றி, அதில் சீரகம் சிறிது தேய்த்துப் போட்டு, அதன் மேல் வதக்கிய பூண்டு (3 அல்லது 4), புதினாவை மேலாகப் பதிக்கவும்.
6. எண்ணெய் ஊற்றி வேகவிட்டு, பின் திருப்பிபோட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.